இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அல்-தன்பு (al-Tanf) பகுதியில் ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இருதரப்பு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள…
இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
சிரியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அல்-தன்பு (al-Tanf) பகுதியில் ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இருதரப்பு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் புரட்சிகர காவல் படை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.தாக்குதல் ஈரான்ஷஹிர் பகுதியில் ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, அல்-தன்பு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க விசேட படைப் பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் தளம் மீது நேரடியாக விழவில்லை என்றும், தன்பு பகுதிக்கு அருகில் விழுந்ததால் எவ்வித உயிர்ச்சேதமோ பொருள்சேதமோ ஏற்படவில்லை என்றும் சிரிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா இந்த தளத்திலிருந்து கடந்த பெப்ரவரியிலேயே தனது படைகளைத் திரும்பப் பெற்றுவிட்டது.எச்சரிக்கை பிராந்தியத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதலில் ஈடுபட்டு வரும் வேளையில், சிரியா இதில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தது.
சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, தங்கள் நாடு நேரடியாகத் தாக்கப்படாத வரை இந்த பிராந்திய மோதல்களில் நடுநிலை வகிக்கும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்த தாக்குதலுடன் ஈரான் மற்றொரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை இந்த கடல் வழியாக எந்தவொரு எண்ணெய் அல்லது எரிவாயு ஏற்றுமதியும் அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

