13 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று, ஐந்து நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி, சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: கடத்தப்பட்ட சிறுமி, சுமார் ஐந்து நாட்…

13 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று, ஐந்து நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி, சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

கடத்தப்பட்ட சிறுமி, சுமார் ஐந்து நாட்களாகத் தொடர்ச்சியாக 32 நபர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள், அந்தச் சிறுமியைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இந்தத் தீய செயலை அரங்கேற்றியுள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இதுவரை 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய  செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூகத்தின் பாதுகாப்பற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தச் சம்பவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் ஒருமுறை வலுவாக எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் பொலிஸார்  துரித நடவடிக்கை மற்றும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.