நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய ஸ்பெயின் தேசிய அணி,வீரர்களுக்கு மாட்ரிட்டில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 26 வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும்…

நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய ஸ்பெயின் தேசிய அணி,வீரர்களுக்கு மாட்ரிட்டில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

26 வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் முதலில் ஸ்பெயின் அரச குடும்பத்தினரையும், பின்னர் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸையும் சந்தித்தனர்.ஸ்பெயினின் உலகக் கோப்பை நாயகர்கள் உங்களின் ஆட்ட பாணி, அர்ப்பணிப்பு மற்றும் இந்த வெற்றிக்காக நன்றி. உங்கள் ஆட்டத்தை நாடு முழுவதும் பெருமையுடன் ரசித்தது, என்று பிரதமர் சாஞ்சஸ் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து திறந்த மேல் தள பேருந்தில் ("Stars Shine Together" என்ற வாசகத்துடன்) வீரர்கள் மாட்ரிட் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.Spain’s World Cup victory parade has started in Madrid. Just look at the number of fans who came out to welcome the champions of the world! 🔥🇪🇸 pic.twitter.com/H0TCyVM9Fk— Cleverly 💐 (@Cleverlydey4u) July 20, 2026

"Somos Campeones" (நாங்களே சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட சீருடைகளை அணிந்திருந்த வீரர்கள் உலகக் கோப்பையுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

பயிற்சியாளர் லூயிஸ் டெ லா ஃபுவென்டே, இந்த அற்புதமான நாட்டையும், உணர்ச்சிமிக்க ரசிகர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமையான அனுபவம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.

மாட்ரிட்டின் சிபிலெஸ் (Cibeles) சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சுமார் 1.2 இலட்சம் ரசிகர்கள் நேரில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மொத்தமாக 18 இலட்சம் மக்கள் அணியை வரவேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் உலகக் கோப்பை வீரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி இசையுடன் மேடைக்கு அழைக்கப்பட்டனர். 25-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அலெக்ஸ் பயேனா உலகக் கோப்பையுடன் மேடையேறினார்.

பயிற்சியாளர் டெ லா ஃபுவென்டேவை வீரர்கள் தோளில் தூக்கி கொண்டாடினர். முன்னணி வீரர் போர்ஹா இக்லேசியஸ் டிஜேவாக மாறி இசையமைத்த நிலையில், சக வீரர்கள் மேடையில் நடனமாடினர்.

இறுதியில், முழு அணியும் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்தி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியது.

இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரெஸ் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையையும், 2010க்குப் பிறகு முதல் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

2023 மகளிர் உலகக் கோப்பையையும், 2026 ஆண்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளதால், இரு உலகக் கோப்பைகளையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடாக ஸ்பெயின் வரலாறு படைத்துள்ளது.

எனினும், கொண்டாட்டத்தின் போது வடமேற்கு ஸ்பெயினின் சலமாங்காவில் நீரூற்றின் மீது ஏறியிருந்த 13 வயது சிறுவன் ஒருவர் நீரூற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.