2026 - உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் பெற்ற வெற்றிக்கு ஈரான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் கொடூ…

2026 - உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் பெற்ற வெற்றிக்கு ஈரான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கொடூரமான போர் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் ஆகியவற்றை ஸ்பெயின் அரசு கடுமையாகக் கண்டித்திருந்தது.

இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் ஸ்பெயின் அணிக்கு உலகளவில் பெரும் ஆதரவு பெருகியிருந்தது. மறுபுறம், இஸ்ரேலின் கொள்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலிக்கு ஆதரவாக இஸ்ரேலிய அரசியல்வாதிகளும் கால்பந்து இரசிகர்களும் ஆர்ஜென்டினாவை ஆதரித்தனர்.நாட்டின் சுதந்திரம்.. இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி முகமது பாகர் கலிபாஃப் திங்கள்கிழமை அன்று கூறியதாவது, "பாலஸ்தீன மக்களுக்காக ஸ்பெயின் வீரர்கள் குரல் கொடுத்ததும், ஈரானுக்கு ஸ்பெயின் வழங்கிய ஆதரவும் அந்த அறிவுமிக்க, மரியாதைக்குரிய நாட்டின் சுதந்திரத் தன்மையைக் காட்டுகிறது.

ஸ்பெயினின் இந்த வெற்றி அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலகில் சுதந்திரம், சுதந்திரமான சிந்தனை மற்றும் நீதியை விரும்பும் பல நாடுகளின் இதயங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது."முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் பேசுகையில், சமீபத்திய மாதங்களில் ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில் ஸ்பெயின் தேசிய அணியின் நடத்தையும், ஸ்பெயினின் பொதுவான நிலைப்பாடும் மிகவும் மதிப்புமிக்கது" என்று பாராட்டினார்.