ஐக்கிய அமெரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் இறுதி விசிலுக்குப் பிறகு, மைதானமே போர்க்களமாக மாறிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. கவியை கீழே தள்ளிய பரெடெஸ் சம்பியனாவதைக் கொண்டாடுவதற்காக ஸ்பெய்னின் மாற்று வீரர்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன…

ஐக்கிய அமெரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் இறுதி விசிலுக்குப் பிறகு, மைதானமே போர்க்களமாக மாறிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கவியை கீழே தள்ளிய பரெடெஸ்

சம்பியனாவதைக் கொண்டாடுவதற்காக ஸ்பெய்னின் மாற்று வீரர்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் மைதானத்திற்குள் ஓடி வந்தனர்.

அப்போது ஆர்ஜென்டீனாவின் லியான்ட்ரோ பரெடெஸ்  ஸ்பெய்னின் கவியை ஆக்ரோஷமாகப் பிடித்து தரையில் தள்ளினார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு அணி வீரர்களும் உடனடியாக மைதானத்தின் நடுவே திரண்டு ஒருவரையொருவர் முட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமரசம் செய்ய ஓடிவந்த பயிற்சியாளர் ஸ்கலோனி

மைதானத்தில் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியதையடுத்து, ஆர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியனல் ஸ்கலோனி உடனடியாக மைதானத்திற்குள் விரைந்தார். வீரர்களைக் கட்டுப்படுத்தி, இரண்டு தரப்புக்குமிடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்து நிலைமையைக் தணிக்க அவர் தீவிரமாக முயன்றார்.