களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனு…

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுகடந்த திங்கட் கிழமை(13) இரவு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இந்த உணவகம் அடையாளம் காணப்பட்டது.

அதனடிப்படையில் இன்று புதன்கிழமை(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்தே உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க பொதுசுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.