மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (13) இரவு, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13) இரவு, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட விசேட உணவு பாதுகாப்பு சோதனையின் போது, குறித்த உணவகத்தில் பல்வேறு சுகாதார குறைபாடுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் நேற்று (15) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உணவக உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், உணவகத்தில் கண்டறியப்பட்ட அனைத்து சுகாதார குறைபாடுகளும் முழுமையாக சீர்செய்யப்படும் வரை அந்த உணவகத்தை மூடிவைக்கவும் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தை சீல் வைத்து தற்காலிகமாக மூடியுள்ளனர்.

