குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தன்னைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக அ…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தன்னைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவில், தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு கருத்துகளை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை மீதான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.அதேநேரம், இந்த விசாரணைகளின் போது நீதிமன்றில் சுரேஷ் சலே தொடர்பில் பல முக்கிய தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,

