இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி அருகே உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வ…

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி அருகே உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த பிரேசில் பிரஜையொருவர், காலி, தல்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், அந்த இடத்திற்கு வந்த இருவர் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணியின் அறையை சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது சுற்றுலாப் பயணியின் பிரேசில் நாட்டு பாஸ்போர்ட், அமெரிக்க ஆவணங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற உபகரணங்களை வலுக்கட்டாயமாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் அந்த இடத்திற்கு வந்த மற்றொரு நபரையும் இணைத்துக் கொண்டு, மூவருமாக குறித்த பிரேசில் பிரஜைக்கு கைவிலங்கு போட்டு அச்சுறுத்தியுள்ளனர்.குறித்த சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல் இருக்க கொழும்பிலுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரியொருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அந்த குழுவினர் கூறியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்

தமக்கு 30 இலட்சம் ரூபா லஞ்சம் வேண்டும் எனவும், அத்தொகையை உடனடியாக வழங்குமாறும் பிரேசில் பிரஜையை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், உணவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய அல்டோ ரக காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், உணவட்டுன சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.