நாட்டில் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நுளம்புகள் பெருகும் வகையில் சுற…
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், 25,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருந்தமை தொடர்பில் 4,672 பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

