டெங்கு நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன…

டெங்கு நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுத்திகரிப்பு மற்றும் நுளம்பு ஒழிப்பு புகைத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 67,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை பராமரிக்கத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (12) பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்ட பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.