நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 34,828 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் இதுவரை 66,064 டெங்…
நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 34,828 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இதுவரை 66,064 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக ஜீன் மாதம் மாத்திரம் 21,538 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, கடந்த 9 நாட்களில் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.டெங்கு காய்ச்சல்
மேல் மாகாணத்தில் 34,828 (52.72 சதவீதம்) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென் மாகாணத்தில் 10,372 (15.70 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.
டெங்கு பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்வடைந்துள்ளது.

