இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், ஜூலை மாதத்தில் மட்டும் 7,038 டெங்கு நோயா…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், ஜூலை மாதத்தில் மட்டும் 7,038 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கூறினார்.
பதிவான மொத்த நோயாளர்களில் 52.40 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதிகளவிலான பாதிப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12,663 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 12,582 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,191 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

