இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளில் 88% பேர் டெங்கு 2 வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில…

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளில் 88% பேர் டெங்கு 2 வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர கூறியுள்ளார்.டெங்கு 2 வைரஸ் வகை டெங்கு 2 வைரஸ் வகைக்கு எதிரான மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நாட்டில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு நோய்த்தொற்றால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் பெண்கள் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும், 19,943 டெங்கு நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நோயாளிகள் அடையாளம்  அதிகபட்சமாக, மேற்கு மாகாணத்தில் 39,667 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 11,610 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளிகளும், சபரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில், கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.