நீர்கொழும்பு சிறையில் டெங்கு காய்ச்சலால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல்களை சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நேற்று (07.07.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இது தொடர்பான விளக்கங்களை அளித்து…
நீர்கொழும்பு சிறையில் டெங்கு காய்ச்சலால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல்களை சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நேற்று (07.07.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இது தொடர்பான விளக்கங்களை அளித்துள்ளார்.40 கைதிகள் உயிரிழப்பு அவர் மேலும் கருத்துரைக்கையில், டெங்கு காய்ச்சலால் 40 கைதிகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் பொய்யானவை. அது முற்றிலும் பொய்யான ஒரு செய்தி. 40 பேர் இறந்திருந்தால், அங்கே சடலங்கள் இருந்திருக்கும்.
எந்தவொரு நோயாளிக்கும் சிகிச்சை உண்டு.ஒருவருக்குக் காய்ச்சல் இருந்தாலோ, அல்லது பலருக்குக் காய்ச்சல் இருந்து, அது குறித்த தகவல்கள் முந்தைய நாள் வந்திருந்தாலோ, தெரிய வந்திருக்கும்.
ஆனால் சிறைக்கைதிகளில் ஒருவருக்கு மட்டுமே டெங்கு நோய் இனம்காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக எந்த முறைப்பாடும் வரவில்லை. மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கவில்லை. சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அதுதான் பொதுவான வழிமுறை என தெரிவித்துள்ளார்.

