டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்தி…

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது, வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஒரே நாளில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை என மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நளின் கல்தேரா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.