நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்தி…
நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்தியர் நயானி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், வேகமாக பரவி வரும் தோல் நோய்கள் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2,000-ஐ எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

