தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் இரண்டு உறுப்பினர்களிடையே முரண்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் இன்றைய நகரசபை அமர்வின் போது, குறித்த இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் வலுப்பெற்று முறுகல் நிலை உருவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.…
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் இரண்டு உறுப்பினர்களிடையே முரண்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்றைய நகரசபை அமர்வின் போது, குறித்த இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் வலுப்பெற்று முறுகல் நிலை உருவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பின்னர் முரண்பாட்டில் ஈடுபட்ட நகரசபை உறுப்பினர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக இருவேறு முறைபாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களிடையே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த இரண்டு உறுப்பினர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

