தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்…

தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர். மக்களின் தெளிவான சிந்தனைஇவர்கள் ஏன் தங்களின் சொந்தத்தாயகமான தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள்.இவர்களின் பிள்ளைகள் தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். அதற்கு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள். மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள். எனவே, இது மக்களுக்கான கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில் சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்" என்று அவர் சாடினார்.