யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செம்மணி போன்ற சம்பவங்களின் சாட்சியங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண…
யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செம்மணி போன்ற சம்பவங்களின் சாட்சியங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

