யாழ்ப்பாணம் - மன்னார் வீதியின் பள்ளிக்குடா சந்தியில் மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் பூநகரி வைத்தியச…
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியின் பள்ளிக்குடா சந்தியில் மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

