அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.லங்காசிறியின்…

அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அத்தோடு, தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் கூறினார்.திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராக சம்பந்தனை தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சம்பந்தன் எவ்வாறு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாமல் மௌனமாக இருந்தாரோ அதே போலவே தற்போதைய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,