தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கடந்த 14ஆம் திகதி இரவு விகாரை சந்தியில் உள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர…
தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கடந்த 14ஆம் திகதி இரவு விகாரை சந்தியில் உள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் வன்முறை மோதலாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அருகில் வசித்து வந்த நபர் தலையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தச் சந்தர்ப்பத்தில், தலையிட்ட நபர் தடியால் தாக்கியதில் 57 வயதுடைய சுனில் ரத்நாயக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியை தனது வீட்டின் கூரையின் மீது மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதுடன், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

