தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு அஞ்சி, தனது குடும்பத்தைக் கடனில் இருந்து காப்பாற்ற அவர் எடுத்த இந்த முடிவு, சமூக வல…
தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு அஞ்சி, தனது குடும்பத்தைக் கடனில் இருந்து காப்பாற்ற அவர் எடுத்த இந்த முடிவு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு...
இந்த திருமணத்தில் வழக்கமான சொகுசு கார்களுக்குப் பதிலாக, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்-டிராலிகளில் 14 மணமகன்களும், மற்றொரு டிராக்டரில் 14 மணப்பெண்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இந்தத் தனித்துவமான ஊர்வலக் காணொளி இணையவாசிகளைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
14 தனித்தனி திருமணங்களை நடத்தினால் மண்டபம், உணவு, போக்குவரத்து எனப் பல மில்லியன் ரூபாய் செலவாகியிருக்கும். ஆனால், அனைத்தையும் ஒரே மேடையில் முடித்ததால் பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்கிறது அந்தக் குடும்பம். நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும், இணையத்தில் ஒரு பெரும் விவாதமே வெடித்துள்ளது.
ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு, சிக்கனம் மற்றும் நடைமுறைத் தீர்வுகளே மிக முக்கியம் என்ற செய்தியை இந்தத் திருமணம் உரக்கச் சொல்லியிருக்கிறது .ஆடம்பரத்தை விட அன்பும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்வுமே முக்கியம் என்ற அந்த விவசாயியின் நோக்கம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாக மாறும் இந்தத் திருமணக் கலாச்சாரத்திற்கு மத்தியில், மத்திய பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்த ஒரு விவசாயி செய்த இந்த செயல் இந்தியா முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

