தங்க முலாம் பூசப்பட்ட ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கியுடன் முதியவர் ஒருவரைக் கைது செய்த சம்பவத்தில், நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதன் பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை பதில்…

தங்க முலாம் பூசப்பட்ட ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கியுடன் முதியவர் ஒருவரைக் கைது செய்த சம்பவத்தில், நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதன் பின்னர்,  முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை பதில் நீதவான் ரவி மதுகம இன்று (10) உத்தரவிட்டார்.

வெள்ளவத்தை, ஹவ்லொக் (Havelock) வீட்டுத் தொகுதியில் முதியவர் ஒருவரின் பையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட குறித்த துப்பாக்கியை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டிருந்தனர். இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், இந்த வழக்கில் சந்தேகநபராக   முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும்  பெயரிட்ட பின்னரே நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.