மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில…
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், மத்திய மாகாண சாதாரண தர தமிழ் மொழி மூல தவணைப் பரீட்சை வினாத்தாள், 2019ஆம் ஆண்டு வடக்கு மாகாண வினாத்தாளின் பிரதியாக பயன்படுத்தப்பட்டதாகவும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வடமேல் மாகாணத்தில் வினாத்தாள்கள் தாமதமாக கிடைத்ததால் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, ஆசிரியர் இடமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் பல ஆசிரியர்கள் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இடமாற்ற உத்தரவு கிடைத்தும் விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இடமாற்ற நடைமுறைகளை வெளிப்படையாகவும் நியாயமானதாகவும் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

