சமகால அநுர அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் நாமல் அழைப்பு விடுத்துள்…

சமகால அநுர அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் நாமல் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கடிதத்தில், நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தடுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளார்.

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்புஇது குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.அரசின் இந்த நடவடிக்கையானது சட்டவாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்குப் பலமான எதிர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் நாமல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.