கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதே இந்த அழைப்பாணையின் நோக்கமாகும். நீதிமன்றத்தில் முன்னிலை அதன்பிர…
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதே இந்த அழைப்பாணையின் நோக்கமாகும். நீதிமன்றத்தில் முன்னிலை அதன்பிரகாரம் ரவி கருணநாயக்க இம் மாதம் 17ஆம் திகதி ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.தேசிய லொத்தர் சபையின் ஒரு விசேட செயற்திட்டத்தின் கீழ் ஊழியர்களை நியமிக்கும் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ரவி கருணநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.
இதே சம்பவம் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேராவும் முன்னர் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

