தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வெற்றிடமொன்றையும் நிர…
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வெற்றிடமொன்றையும் நிரப்புவதற்கு விதந்துரைப்பதற்காக ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்காக விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கோரப்படுகிறது.

