தேயிலை வளத்தை சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு அழிப்பதாக தொழிலாளர்கள் கவலை! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், பகுதியில் மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள…
தேயிலை வளத்தை சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு அழிப்பதாக தொழிலாளர்கள் கவலை!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், பகுதியில் மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள தேயிலை தோட்டத்திலும், கெசல்கமு ஓயா பகுதியிலும் நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டப் பிரிவிலும், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை.
மேலும் குறித்த குழுவினர் தேயிலை மரங்களை வேரோடு பிடுங்கி, சட்டவிரோதமாக முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதாகவும், இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களும், தோட்ட நிர்வாகமும் கூறுகின்றன.
நேற்று புதன்கிழமை இரவு நோர்வூட் தோட்டத்திற்குச் சொந்தமான என்.சி தேயிலைப் பிரிவில், சிலர் தேயிலைச் செடிகளுக்கு அடியில் உள்ள மாணிக்கக் கல் அடங்கிய மண்ணைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் தோண்டப்பட்ட குழிகளால், தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
என்.சி தேயிலைத் தோட்டத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நோர்வூட் பொலிஸாரிடம் புகார் அளித்த போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் காணப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் கெசல்கமு ஓயா அருகில் தொடர்ந்து இரவில் 200 க்கும் மேற்பட்டோர் மாணிக்ககல் அகழ்ந்தெடுத்து வருவதால் அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
அகழ்வு பணிகளின் பின்னர் குறித்த தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத அகழ்வுகள் மற்றும் மூடப்படாத குழிகள் பாரிய சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.
நிலத்தடி நீர் குறைதல், மண் அரிப்பு மற்றும் தேயிலை தோட்டத்தில் நடுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற குழிகளால் தொழிலாளர்கள், எதிர்பாராத விதமாக மனிதர்கள் அல்லது விலங்குகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன எனவும் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சட்டவிரோதமாக அல்லது முறையாக மூடப்படாமல் திறந்த நிலையில் விடப்படும் குழிகளில் தேங்கும் மழைநீர், நுளம்புகள் பெருக வழிவகுத்து டெங்கு போன்ற நோய்களை உருவாக்குகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

