தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது .இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ்…

தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது .இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களது வழக்கு இன்று (9) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபர்கள், நுவரெலியா பொலிஸாவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கமைய, சந்தேகநபர்களை ஜூன் (26) நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து மீண்டும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.