தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக பலத்த காற்று: ஆம்பர் நிற எச்சரிக்கை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இன்று செவ்வாய்க்கிழமை நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக, பலத்த காற்றுத் தொடர்பான…

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக பலத்த காற்று: ஆம்பர் நிற எச்சரிக்கை

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இன்று செவ்வாய்க்கிழமை நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக, பலத்த காற்றுத் தொடர்பான ஆம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

எச்சரிக்கையானது இன்று முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

கூரை ஓடுகள், தகரங்கள், மின்சார மற்றும் தொலைத்தொடர்புக் கம்பிகளுக்குச் சேதங்கள் ஏற்படலாம் என்பதுடன், மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயமும் காணப்படுகிறது

நெல் வயல்கள், வாழை, பப்பாசி உள்ளிட்ட பயிர்த் தோட்டங்களுக்கும், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளுக்கும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடலோரப் பகுதி தாழ் நிலங்களில் கடல் நீர் உட்படக்கூடிய அபாயம் உள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீழ்ந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்குப் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.