இலங்கை நாடாளுமன்ற அமர்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் நேற்று(08.07.2026) பிரதமரிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டன. இலங்கையின் அரிசி உற்பத்தியைப்பெருக்க வேண்டும் என்று அரசு கூறுகின்றது.எனினும் திருகோணமலைமாவட்டத்தில் 1983 ஆ…
இலங்கை நாடாளுமன்ற அமர்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் நேற்று(08.07.2026) பிரதமரிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டன. இலங்கையின் அரிசி உற்பத்தியைப்பெருக்க வேண்டும் என்று அரசு கூறுகின்றது.எனினும் திருகோணமலைமாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்புமக்கள் நெற்செய்கை மேற்கொண்டு வந்த 205 சிறு குளங்களும் 25 அணைக்கட்டுகளும் கைவிடப்பட்டு உள்ளன. இதனைப் பிரதமர் அறிவாரா? இதற்கான காரணம் என்ன? என நாடாளுமன்ற உறுப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.நாட்டின் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்குமேற்படி குளங்களையும் அணைக்கட்டுக்களையும் மீண்டும் நெற்செய்கைக்கு கொண்டு வருவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனவா? அப்படியாயின் அவை யாவை? என கேட்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் விவசாயம் செய்த மக்களிடம் ஆவணங்கள் உள்ள 33,563 ஏக்கர் நிலத்தை வனத்துறையும் 31,627 ஏக்கர் நிலத்தை வனவிலங்குத் துறையும் கையகப்படுத்தி வைத்துக் கொண்டு அவற்றில் மக்கள் விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றது. இதனைப் பிரதமர் அறிவாரா? இவற்றை விடுவிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இந்த நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைத்து நாட்டின் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசு ஆவன செய்யுமா? ஆம் எனின் எப்பொழுது? என கேட்கப்பட்டது.மேற்படி நிலங்களை விடுவித்து குளங்களை மறுசீரமைத்து மக்கள் விவசாயம் செய்யவும் அரிசி உற்பத்தியை பெருக்கவும் பிரதமர் ஆவன செய்வாரா எனவும் கேள்வி கேட்டார்.மக்களை மீள்குடியேறவிடாமல் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவானது 32042 ஏக்கர் பரப்புடையது. இதில் 78வீதமான பரப்பை வனவிலங்குத் துறையும் , 22வீதமான பரப்பை வனத்துறையும் உரிமைகோரி வருகின்றனர். இதற்குள் ஆவணங்கள் உள்ள 4778 குடும்பங்களும்18 பாடசாலைகளும், 96 சமய வழிபாட்டு இடங்களும் பிரதேச சபைப் பணிமனை, பிரதேச செயலாளர் அலுவலகம், பொலிஸ் அலுவலகம் முதலியனவும் காணப்படுகின்றன. இவர்கள் எவரும் வனத்துறை, வனவிலங்குத் துறையின் ஒப்புதல் இல்லாமல் தத்தமது இடங்களில் எந்த வேலையும் செய்ய முடியாதுள்ளது. இதனைப் பிரதமர் அறிவாரா? அறிந்தால் இதைத் தீர்க்க என்ன செய்யப் போகிறார்?
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கல்லரிப்பு என்னும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் நீளமான 1 மீட்டர் அகலமான கால்வாயை அமைக்க வனவிலங்குத் துறை அனுமதி மறுக்கிறது. ஆனால் காடுகளை வெட்டி 5 மீட்டர் அகலமும் 50 கிலோமீட்டர் நீளமுமான வீதியை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இதற்குப் பிரதமர் என்ன சொல்லப் போகின்றார் ?
வெல்வேரி என்னும் கிராம சேவகர் பிரிவில் வாழ்ந்த 50 குடும்பங்கள் போரால் இடம்பெயர்ந்தன. அந்த இடங்களை வனத்துறை பிடித்து வைத்துக்கொண்டு, அந்த மக்களை அங்கு மீள்குடியேறவிடாமல் தடுத்து வருகிறது. அந்த இடத்தை ஹெட்டியாராச்சி என்ற முதலாளிக்கு நீண்டகாலக் குத்தகைக்கு கொடுத்துள்ளது. இது எந்த வகையில் நீதி எனவும் கேள்வி எழுப்பினார்.

