திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்ட தரப்பினரால் இன்று(20.07.2026) அகற்றப்பட்டுள்ளது. திருகோணமலை உட்துறைமு…

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்ட தரப்பினரால் இன்று(20.07.2026) அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை, 17.5 அடி அகலம் கொண்ட கட்டடம் ஆகியவை சட்டவிரோதமான முறையில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுகடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2)இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம் அவற்றை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு உடைத்தல் கட்டளையானது 14.07.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த உடைத்தல் கட்டளைக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு உடைத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளன.பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்ய இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில கடற்றொழிலாளர்கள் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு, சுற்றுலா பணியகத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய அரச திணைக்களங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,அத்துடன் குறித்த பகுதியில் கட்டப்பட்டுள்ள மலசலகூடத்தின் கழிவுகள் நேரடியாக கடலினுள் கலக்கும் அபாயமும், குறித்த கட்டடங்கள் கடல்காட்டியினை மறைக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்துறை மேம்படும் வகையிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் திட்டங்களை மேற்கொண்டு திருகோணமலையை பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.