திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகளின் விஜயம் – எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் விசேட மாநாடு, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) ஏற்பாடு செய்த “திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநி…

திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகளின் விஜயம் – எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் விசேட மாநாடு,

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) ஏற்பாடு செய்த “திருகோணமலைக்கு ஆசிய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகளின் விஜயம் – எதிர்காலத்திற்கான மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவோம்” என்ற மாநாடு, திருகோணமலை பீச் ரிசோர்ட் & ஸ்பாவில் (09)மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய இராஜதந்திரப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவரும், Platinum Group of Companies நிறுவனத்தின் தலைவருமான குமார் ஜெயக்குமாரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. திருகோணமலையை இலங்கையின் அடுத்த முக்கிய சர்வதேச முதலீட்டு மையமாக உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, ஆழ்கடல் துறைமுகம் மற்றும் தளவாட சேவைகள் உட்கட்டமைப்பு மேம்பாடு & உற்பத்தித் தொழில்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் & ஏற்றுமதி வாய்ப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI) & அரசு – தனியார் கூட்டாண்மை (PPP) போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த இயற்கை ஆழ்கடல் துறைமுகம், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம், வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மற்றும் பரந்த நில வளங்கள் ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் சுற்றுலா, துறைமுகம், உற்பத்தி மற்றும் சர்வதேச முதலீட்டு மையமாக தெற்காசியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக வளர்வதற்குத் தேவையான அனைத்து வளங்களும் திருகோணமலைக்கு உள்ளன. இன்றைய நிகழ்வு, புதிய சர்வதேச கூட்டாண்மைகளுக்கான உறுதியான தொடக்கமாகும்." என்றும் இதன் போது குமார் ஜெயக்குமாரன் தெரிவித்தார். நிகழ்வின் நிறைவாக நடைபெற்ற Business-to-Business (B2B) சந்திப்புகள் மூலம் உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகள் நேரடியாகச் சந்தித்து எதிர்கால கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடினர். திருகோணமலையை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா மற்றும் முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில் இந்த மாநாடு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.