ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டி மூலம் சட்டவிரோதமான முறையில் ஆமைகளைக் கடத்திச் சென்ற நான்கு சந்தேக நபர்கள் மொரவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவ்பொத்தானையிலிருந்து மஹதிவுல்வெவ பகுத…

ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டி மூலம் சட்டவிரோதமான முறையில் ஆமைகளைக் கடத்திச் சென்ற நான்கு சந்தேக நபர்கள் மொரவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தானையிலிருந்து மஹதிவுல்வெவ பகுதி நோக்கி பயணித்த முற்சக்கர வண்டி ஒன்றை, ரொட்டவெவ சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.சட்ட நடவடிக்கை இதன்போது, முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 ஆமைகள் மீட்கப்பட்டதை அடுத்து, அதில் பயணித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட நான்கு நபர்கள் எனவும் திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட முற்சக்கர வண்டி மற்றும் ஆமைகளையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய மேலதிக சட்ட நடவடிக்கைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.