திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர, சூரியபுர விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை முடக்குச்செட்டி பகுதி…
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர, சூரியபுர விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை முடக்குச்செட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக சம்பவ இடத்துக்கு சென்றிருந்தனர்.
இதன்போது, கங்கை ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில் அதிகாரி ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர் சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய 41 வயதுடைய சார்ஜன்ட் திஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் குறித்த அதிகாரியைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

