திருகோணமலை- மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணை சம்பவ…
திருகோணமலை- மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த வியாழக்கிழமை (16) காலை 10.00 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.இந்நிலையிலேயே, இன்று காலை அவர் குளக்கரைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்திற்குச் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

