ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று(20.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசின் வாக்கு வங்கி சடுதியாக வீழ்ச்சி இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில், "22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், வெறும் 1240 பேரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது. தேசிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு விடயத்தை இவ்வளவு சிறிய மாதிரி அளவுடன் மதிப்பீடு செய்வது ஏற்புடையதல்ல" என்று சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி குறித்த தரவுகளை அவர் முன்வைத்தார்.
*2024 ஜனாதிபதித் தேர்தல்: 42வீத வாக்குகள். * பொதுத்தேர்தல்: 62வீத வாக்குகள். * 2025 மே மாத உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 43வீத வாக்குகள். ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே அரசின் வாக்கு வங்கி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரப் பாதிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், இத்தகைய சாதகமான அறிக்கையை வெளியிடுவது நகைப்புக்குரியது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், "ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் இந்த அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் தீர்ப்பு வெளியாகும், மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.

