நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு புதன்கிழமை (08) அன்று க…

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு புதன்கிழமை (08) அன்று கொண்டுவரப்பட்டபோது, அங்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரைச் சந்தித்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

“அந்த அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கையால்தான் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு, மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. எம்மைக் காப்பாற்றிய அந்த அதிகாரியைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன?” என அவர்கள் அமைச்சரிடம் வினவினர். “நாங்கள் அனைவரும் ஒரே சீருடை அணிந்த அணியாகச் செயல்படுபவர்கள். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விமர்சனங்களை நிறுத்தி, அவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிறைச்சாலை அதிகாரிகள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.