டிக்டொக் செயலி மூலம் நட்பாக பழகிய 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயது சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பிரதேசத்தில் வைத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தவறான துன…
டிக்டொக் செயலி மூலம் நட்பாக பழகிய 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயது சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பிரதேசத்தில் வைத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தவறான துன்புறுத்தல்புத்தளம், மாரவில பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், டிக்டொக் மூலம் 17 வயது சந்தேகநபருடன் அறிமுகமாகி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியை நேரில் சந்திக்கச்சென்று, சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபோது, சிறுமியை தவறான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.இதன்பின்னர், புத்தளத்தில் உள்ள சிறுமியின் சகோதரியின் வீட்டில் வைத்து, இரண்டாவது முறையாகவும் தவறான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.இதனையடுத்து குறித்த சிறுமியை களுத்துறைப் பிரதேசத்திற்கு அழைத்துச்சென்றிருந்த நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவருடன் தங்கியிருந்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

