நாட்டை புரட்டிப்போட்ட டிட்வா' சூறாவளி அனர்த்தம் காரணமாக மலையக ரயில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்திருந்த நிலையில், இன்று (11) முதன்முறையாக பேராதனை சந்தி ரயில் நிலையத்திலிருந்து கடுகண்ணாவைக்கு ரயில் ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்டி ரயில் நி…
நாட்டை புரட்டிப்போட்ட டிட்வா' சூறாவளி அனர்த்தம் காரணமாக மலையக ரயில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்திருந்த நிலையில், இன்று (11) முதன்முறையாக பேராதனை சந்தி ரயில் நிலையத்திலிருந்து கடுகண்ணாவைக்கு ரயில் ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கண்டி ரயில் நிலையத்திலிருந்து விசேட சாலை மார்க்கமாக பேராதனை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரயில் எஞ்சின் மற்றும் இரு பிரேக் வான்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ரயில், கடுகண்ணாவை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாட்டை புரட்டிப்போட்ட டிட்வா' சூறாவளி சூறாவளியினால் கடுமையாகச் சேதமடைந்துள்ள ரயில் மார்க்கங்களை விரைவாகப் புனரமைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த ரயில் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான காலநிலை மற்றும் நிலச்சரிவுகளால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில்வே உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புப் பணிகளில், இந்த ரயில் இயக்கம் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

