கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, மொத்தம் 202,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் சப…

கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, மொத்தம் 202,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, முற்றாகப் பாதிக்கப்பட்ட 148,000 ஏக்கர் நெல் வயல்களுக்காக, 116,278 விவசாயிகளுக்கு 8,888.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.இழப்பீட்டுத் தொகை விவசாய திணைக்களத்தின் ஊடாக மகாவலி வலயங்கள், மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பகுதிகளில் மக்காச்சோளம், மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களைச் செய்கை பண்ணிய 85,747 விவசாயிகளுக்கு 3,453 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர்ச் செய்கைக்காக ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாயும், மக்காச்சோளம், மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களின் ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.