அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இலக்காகக் கொண்ட படுகொலை சதித்திட்டம் தொடர்பாக இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இலக்காகக் கொண்ட படுகொலை சதித்திட்டம் தொடர்பாக இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா அல்லது ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலில் ஈரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்குப் பொறுப்பானவர்களிடம் பழிவாங்கப்படும் என ஈரான் பலமுறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது அவர் அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ விமானத்திலேயே பயணித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றன.

