உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஜனாதிபதிக்கு வொளாடிமிர் செலென்ஸ்கீக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடங்களை ஆரம்பித்துள்ளனர். உக்ரைனில் மிகவும் செல்வாக்கு பெற்ற பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய மிகைலோ பெடோரோவை ஜனாதிபதி செலென்ஷஸ்கீ திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ரஷ்யாவுக…
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஜனாதிபதிக்கு வொளாடிமிர் செலென்ஸ்கீக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடங்களை ஆரம்பித்துள்ளனர். உக்ரைனில் மிகவும் செல்வாக்கு பெற்ற பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய மிகைலோ பெடோரோவை ஜனாதிபதி செலென்ஷஸ்கீ திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஜனாதிபதி செலென்ஸ்கீ எடுத்துள்ள இந்த முடிவு உக்ரைன் இராணுவம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை முதலே தலைநகர் கீவ்வில் உள்ள இவான் பிராங்கோ சதுக்கத்தில் பெருமளவிலான இளைஞர்களும் பொதுமக்களும் திரண்டனர். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "அவமானம்! அவமானம்!" என்று முழக்கமிட்டனர். போராட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்த சுலோக அட்டைகளில் ஜனாதிபதியின் முடிவை விமர்சித்து பல கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன. "பெடோரோவ் மீது கை வைக்காதே!", "வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!" மற்றும் "நீ என்ன செய்கிறாய், முட்டாளே?" போன் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் இந்த முடிவு இராணுவ வீரர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவுக்கும் இடையிலான அதிகார மோதலில், ஜனாதிபதி செலென்ஸ்கீ, தளபதி சிர்ஸ்கிக்கு ஆதரவாகச் செயல்பட்டு பெடோரோவை நீக்கியுள்ளார் என்பதே மக்கள் கோபத்திற்கு முக்கியக் காரணமாகும். மக்கள் வீதிக்கு வந்து தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பது சரியானதுதான். உக்ரைன் சமூகம் என்ன சொல்கிறது என்பதை நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்" என ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

