உக்ரைன் மீது ரஷ்யா நேற்று திங்கள் கிழமை அதிகாலை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா். உக்ரைனின் தலைநகரான கீவில் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் நேரடியாக விழுந்து வெடித்ததில் 15 போ் உயிரிழந்தனா். 56 போ் காயமடைந்தனா். மேலும், கீவைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதி…

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று திங்கள் கிழமை அதிகாலை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா்.

உக்ரைனின் தலைநகரான கீவில் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் நேரடியாக விழுந்து வெடித்ததில் 15 போ் உயிரிழந்தனா். 56 போ் காயமடைந்தனா். மேலும், கீவைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதிகளிலும் 6 போ் உயிரிழந்தனா்.

பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

உக்ரைன் தரப்பில் கூறுகையில், ரஷ்யா ஒரே இரவில் 351 ட்ரோன்களையும்; 68 ஏவுகணைகளையும் ஏவின. அதில் 29 ஏவுகணைகள் உக்ரைனின் பாதுகாப்பு வளையத்தைமீறி இலக்குகளைத் தாக்கின.

உக்ரைனிடம் ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ரஷ்யா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)