உலகக் கிண்ண உதைபந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நிலைய…

உலகக் கிண்ண உதைபந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகக் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நிலையில், 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, இம்முறையும் அரையிறுதியில் வெளியேறியதால் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியின் முடிவைத் தொடர்ந்து பிரான்ஸின் பல நகரங்களில் ரசிகர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சில இடங்களில் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் பாரீஸிலும் சில பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பின்னரான இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பல நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.