ஸ்பெய்ன் அணிக்கு எதிரான அதிர்ச்சி தோல்வியைத் தொடர்ந்து, போர்த்துகல் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் றொபர்ட்டோ மார்டினெஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் போர்த்துகல் அணி 1-0 என்ற கணக்கில் ஸ்பெய்னிடம் தோற்று வெளி…

ஸ்பெய்ன் அணிக்கு எதிரான அதிர்ச்சி தோல்வியைத் தொடர்ந்து, போர்த்துகல் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் றொபர்ட்டோ மார்டினெஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் போர்த்துகல் அணி 1-0 என்ற கணக்கில் ஸ்பெய்னிடம் தோற்று வெளியேறிய சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மார்டினெஸ், திங்கட்கிழமையுடன் தனது ஒப்பந்தம் நிறைவடைவதைக் குறிப்பிட்டதுடன், போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பு இனி புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யலாம் என்றார்.

"நான் போர்ச்சுகல் அணிக்கு வந்தது உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான். அதை சாதிக்க முடியாத பட்சத்தில், நான் இந்த பதவியில் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது ஒப்பந்தம் இன்றோடு முடிகிறது, இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணம் தொடங்குவதற்கு முன்பாக தனது விலகல் குறித்து இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று கூறிய மார்டினெஸ், ஸ்பெய்னுக்கு எதிரான போட்டியே போர்த்துகல் அணியின் பயிற்சியாளராக தனது கடைசிப் போட்டி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.