ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ…

ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரில் உள்ள ஆர்போல் கோர்டோ நீரூற்று பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொண்டாட்டம் உச்சத்தை எட்டியபோது, பலர் நீரூற்றின் மேற்பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நகர மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.