உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய இளம் வீரர் ஒருவர், தனது 25-வது வயதில் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்க கால்பந்து அணியின் சார்பில் விளையாடிய ஜெய்டன் ஆடம்ஸ் (25), உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆஃப்’ (Round of 16) சு…

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய இளம் வீரர் ஒருவர், தனது 25-வது வயதில் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்ஆப்பிரிக்க கால்பந்து அணியின் சார்பில் விளையாடிய ஜெய்டன் ஆடம்ஸ் (25), உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆஃப்’ (Round of 16) சுற்றுக்கு முன்னேறிய அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் இளம் வயதில் காலமான செய்தியை, தென்ஆப்பிரிக்க கால்பந்து வீரர்களுக்கான யூனியன் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெய்டன் ஆடம்ஸ் தென்ஆப்பிரிக்க அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக, தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற போட்டியில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்த வெற்றியின் மூலம், தனது கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக அந்த அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மரணத்திற்கான சரியான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை. இது தொடர்பாக வெஸ்டர்ன் கேப் (Western Cape) காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்துக் கருத்து தெரிவித்த காவல் துறை அதிகாரி வேன் விக், “அவருடைய மரணம் நிகழ்ந்த சூழல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.